அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள்.
- மானாமதுரை அருகே அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- 4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள வடக்கு சந்தனூரில் அழகிய திருவேட்டை அய்யனார், கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை மேடை அமைத்து அதில் புனிதநீர் கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தன.
4-ம் கால பூஜை நிறைவடைந்து பூர்ணஹூதியாகி கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை சுமந்து கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். பின்னர் பூர்ண புஷ்கலா சமேத அழகிய திருவேட்டை அய்யனார் சன்னதி விமான கலசத்திற்கு புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்பு வழிபாடு செய்தனர்.
கோவிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர். மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.