உள்ளூர் செய்திகள்

ஷீரடி சாய்பாபா கோவில் திருவிழா

Published On 2023-04-01 15:01 IST   |   Update On 2023-04-01 15:01:00 IST
  • மதியம் 12 மணி அளவில் மகா மங்கள ஆர்த்தி மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.
  • ஊர் பொதுமக்கள் தேங்காய் பூ பழம் படைத்து பாபாவை தரிசனம் செய்தனர்.

மாரண்டஅள்ளி

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி இ.பி. காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோவில் 7- ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மங்கல இசையுடன் தொடங்கி காலை 7 மணி முதல் 10 மணி வரை பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்பட்டது. மதியம் 12 மணி அளவில் மகா மங்கள ஆர்த்தி மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்ப ட்டது. மாலை 4 மணி அளவில் மங்கல இசையுடன் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளான நான்கு ரோடு, பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, சத்திரம் தெரு, உள்ளிட்ட பகுதிகளில் ஷீரடி சாய்பாபா உற்சவம் மற்றும் வீதி உலா ஊர்வலம் நடைபெற்றது. அது சமயம் ஊர் பொதுமக்கள் தேங்காய் பூ பழம் படைத்து பாபாவை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News