உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2023-07-09 10:21 GMT   |   Update On 2023-07-09 11:00 GMT
  • 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் இருந்தது.
  • புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

கும்பகோணம்:

திருச்சி ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீலா ஆகியோர் உத்தரவின் பேரில் போலீசார் கும்பகோணம் வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இந்த நிலையில் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் சில மர்ம நபர்கள் சாக்கு முட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரெயில் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் முன்பதிவு செய்யப்படாத ஒரு பெட்டியில் சந்தேகப்ப டும்படி இருந்த ஒரு சாக்கு மூட்டையை போலீசார் சோதனையிட்டனர். அந்த சாக்குமூட்டை குறித்து அங்கிருந்த பயணிகளிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டைக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து ரயில்வே தனிப்படை போலீசார் கும்பகோணம் ரயில்வே நிலையத்தில் அந்த சாக்கு மூட்டையை இறக்கி திறந்து பார்த்தனர். அப்போது அதில் 400 கிராம் எடையுள்ள 129 புகையிலை பொருட்கள் பொட்டலங்கள் 50 கிலோவுக்கு இருந்தது.

இதைத்தொடர்ந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை கும்பகோணம் மாநகராட்சி உணவு பாதுகாப்பு பிரிவு அலுவலரிடம் அரசின் வழிகாட்டுதல் படி அழிக்க ஒப்படைத்தனர். மேலும் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News