உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அமராபதீஸ்வரர், ஆனந்தவள்ளி அம்மன் மற்றும் நந்தியெம்பெருமான்.

அமராபதீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

Published On 2023-07-17 14:58 IST   |   Update On 2023-07-17 14:58:00 IST
  • சுவாமி, நந்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த நாலு வேதபதியில் ஆனந்த வள்ளி சமேத அமராபதீஸ்வரர் கோவில் உள்ளது.

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆனி மாத சனிப்பிரதோஷத்தை யொட்டி சுவாமிக்கும், நந்திக்கும் மஞ்சள், பால், இளநீா், பன்னீர் உள்பட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின், சுவாமி, நந்திக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

முன்னதாக புனிதநீர் அடங்கிய கடங்கள் பூஜையில் வைக்கப்பட்டு ஆனந்த சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, கடங்கள் எடுத்து வரப்பட்டு சுவாமி, நந்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதுகுறித்து ஆனந்த சிவாச்சாரியார் கூறிய தாவது:-

உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசையிலும், தட்சணா யன புண்ணிய காலத்தில் வரும் தை அமாவாசையிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையிலும் நமது முன்னோர்களை நினைத்து வீட்டிலேயோ, தீர்த்த கரையிலோ தர்ப்ப ணம் செய்து வழிபட வேண்டும்.

பின், வீட்டில் சமையல் செய்து காக்கைக்கு உணவு அளித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினால் நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்.

ஒவ்வொ ருவரும், அமாவாசையில் இந்த காரியங்களை செய்து வழிபட்டால் அவரது குடும்பம் செழிப்படையும் என்றார்.

இதேபோல், சனி பிரதோ ஷத்திலும் கோவிலுக்கு சென்று சுவாமியையும், நந்தியையும் அபிஷேக பொருட்கள் வாங்கி கொடுத்து வழிபட்டால் குடும்பம் விருத்தியடையும் என்றார்.

முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொருப்பாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News