உள்ளூர் செய்திகள்
சந்தனக்காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு.
வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சந்தனக்காப்பு அலங்காரம்
- ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
- ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் அதிஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் 16 அடி உயர வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது.
இந்த ஆஞ்சநேயரை புரட்டாசி மாத சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாதம் சனிக்கிழமையையொட்டி நேற்று வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவடிவேலு.
தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் செய்திருந்தனர்.