உள்ளூர் செய்திகள்

முத்தம்பட்டியில் சிகப்புப்புளி மரக்கன்றுகளை நடவு செய்த பெண் தொழிலாளர்கள்.

முத்தம்பட்டி ஊராட்சி தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடவு

Published On 2023-12-03 08:02 GMT   |   Update On 2023-12-03 08:21 GMT
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
  • சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் முயற்சியில் திண்டுக்கல் நத்தம் பகுதியில் இருந்து விதைகள் சேகரித்து மருத்துவ குணம் கொண்ட 2,000 சிகப்புப் புளி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக நடவு செய்யப்படுகிறது. வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தன்னார்வலர்கள் வேண்டுகோளின் பேரில் வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தலைமையில் ஊராட்சிக்கு சொந்தமான மரத்தோட்டத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டது. சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக முத்தம்பட்டியில் ஒரே இடத்தில் 100 சிகப்புப் புளி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. அருகி வரும் இந்த மரக்கன்றுகளை முறையாக பராமரித்து பாதுகாத்து வளர்க்க உரிய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News