விழாவில் பங்கேற்று சிலம்பாட்டம் ஆடி அசத்திய சிறுவர்கள், சிறுமிகள்.
எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை
- சேலம் மாவட்டம் எடப்பாடி தேவகிரி அம்மை உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சாமிகளுக்கு 21 மூலிகைகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது
- விழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி தேவகிரி அம்மை உடனமர் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் 63 நாயன்மார் சாமிகளுக்கு 21 மூலிகைகளால் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது
விழாவின் முக்கிய நிகழ்வாக 63 நாயன்மார்கள் அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தது. இதில் சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சந்நிதானம் திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம் பரை வாமதேவ ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க பண்டார சந்நிதி அருளாசி வழங்கினார்.
சிறியவர்கள், பெண்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு சிலம்பாட்டம் ஆடினர். மேலும் பெண்கள் கோலாட்டம், இளைஞர்கள் புலி வேஷம் உள்ளிட்ட பல்வேறு வேஷம் அணிந்து ஆடி அசத்தினர். இதனை ஏராளமான பக்தர்கள் கரகோஷம் எழுப்பி பார்த்து ரசித்தனர். மேலும் சிவனடியார்கள் கலந்து கொண்டு பல்வேறு வாத்தியங்கள் முழங்க சிவா சிவா என கோஷமிட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை எடப்பாடி சிவமுருகன், கணேசன், சிவனடியார் ஆறுமுகம், அறக்கட்டளை உறுப்பினர்கள் கணேஷ், எடப்பாடி தாவாந்தெரு சிலம்பாட்ட கலைக் குழுவினர், விருத்தாலம், திருச்செங்கோடு, புதுச்சேரி கையிலை வாத்தியக் குழுவினர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.