சேலம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்க 4612 மெட்ரிக் டன் உரம் இருப்பு உள்ளது
- குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 1320 மெ.டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு வரப்பெற்றது.
- இந்த யூரியா சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
சேலம்:
குஜராத் மாநிலம் சூரத்திலிருந்து 1320 மெ.டன் கிரிப்கோ யூரியா உர மூட்டைகள் ரெயில் மூலம் செவ்வாய்பேட்டை ரெயில்வே கூட்ஸ் செட்டிற்கு வரப்பெற்றது.
இந்த யூரியா சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு 800 மெ.டன் யூரியா வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 1587 மெ.டன் யூரியாவும், பொட்டாஷ் 544 மெ.டன், டி.ஏ.பி உரம் 890 மெ.டன், காம்ப்ளக்ஸ் உரம் 1591 மெ.டன் ஆக மொத்தம் 4612 மெ.டன் உரம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது போதுமான அளவு இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் உரத்தினை பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.