உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் இடையே கடும் மோதல்

Published On 2023-10-18 09:42 GMT   |   Update On 2023-10-18 09:42 GMT
  • கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது
  • ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

தாரமங்கலம்:

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி யில் 740 மாண வர்கள் பயின்று வருகின்ற னர். 20 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் கடந்த ஒரு ஆண்டாக மாணவர்க ளிடையே சிறு, சிறு மோதல் ஏற்பட்டு வருவதும், மாணவர்கள் ஆசிரியர் மீது கல் எரிந்து பிரச்சினையில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத் தன்று மாலை மாணவர்கள் 2 பிரிவினர் இடையே வாய் தகராறு ஏற்பட்டு பள்ளி வளாகத்திலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் வெளி நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து பள்ளிக்கு வரவழைத்து பெரும் மோதலில் ஈடுபட ஆயத்தமாகினர்.

இந்த தகவல் அறிந்த ஆசிரியர்கள் தாரமங்கலம் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் மற்றும் வெளிநபர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.

இதையடுத்து நேற்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் உமாராணி ஆகியோர் மோதலில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்தனர்.

தொடர்ந்து தாரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தரன் உள்ளிட்டோர் முன்னி லையில் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது தவறான நடவடிக்கையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். மேலும் இதுபோன்ற மோதல்கள் உருவாகாமல் இருக்க பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தி மாணவர்களின் போக்கை கண்காணித்து ஒழுங்கு படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News