உள்ளூர் செய்திகள்

சீலநாயக்கன்பட்டியில் லாரி திருட்டு சம்பவத்தில் ஓராண்டுக்கு பின் வழக்குப்பதிவு

Update: 2023-06-10 10:37 GMT
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி இரவு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நிறுத்தி விட்டு டிரைவர் சேகர் டிபன் சாப்பிட்டு வர சென்றுள்ளார்.
  • மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை அங்கு காணவில்லை.

அன்னதானப்பட்டி:

விழுப்புரம் மாவட்டம், கோம்பையாம் புலியூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆதித்தன் (வயது 48). இவருக்கு சொந்தமான லாரியை, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதி இரவு சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் நிறுத்தி விட்டு டிரைவர் சேகர் டிபன் சாப்பிட்டு வர சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது லாரியை அங்கு காணவில்லை.

இது குறித்து அன்ன தானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், லாரி உரிமை யாளர் ஆதித்தன் சேலம் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதன்பேரில் ஓராண்டுக்கு பின்பு வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News