உள்ளூர் செய்திகள்

சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்கள்.

சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Published On 2023-08-14 15:16 IST   |   Update On 2023-08-14 15:16:00 IST
  • சேலம் மாநகராட்சியில் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.
  • தாங்கள் ஏற்கனவே வேலை பார்த்த இடத்திலேயே மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

சேலம்:

சேலம் மாநகராட்சியில் 800-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் மாநகராட்சியில் சேரும் குப்பைகளை அள்ளி வாகனங்கள் மூலம் குப்பை கொட்டும் பகுதிக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களுக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிச்சிப்பாளையம், அழகாபுரம், செவ்வாய்ப்பேட்டை உள்பட பல பகுதிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் செட்டிசாவடி மற்றும் அம்மாபேட்டை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு குப்பைகளை அரைக்கும் பணிக்கு இடமாற்றம் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று திரண்டனர். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும் தாங்கள் ஏற்கனவே வேலை பார்த்த இடத்திலேயே மீண்டும் பணி அமர்த்த வேண்டும் என்றும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீஸ் உதவி கமிஷனர் வெங்க டேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தூய்மை பணியா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது நாங்கள் வசிக்கும் மண்டலத்துகுள்ளே எங்களுக்கு பணி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து நகர மாட்டோம். என்று கூறியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த சம்பவம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News