உள்ளூர் செய்திகள்

பஸ் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

Published On 2023-08-05 13:00 IST   |   Update On 2023-08-05 13:00:00 IST
  • வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
  • கட்டுப்பாடு இழந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி, அரசு பஸ் மீது மோதியது.

சேலம்:

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தபஸ் அயோத்தியாப்பட்டிணம் அடுத்த ராமலிங்கபுரம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது கட்டுப்பாடு இழந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி, அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த செல்லியம்பாளையம் கலா, டி.பெருமாபாளையம் அர்ஜுனன் இவரது மனைவி வெண்ணிலா, சின்ன கவுண்டாபுரம் போதாம்பு, சேசன்சாவடி நடராஜன், வேப்பிலைப்பட்டி ஆனந்தகுமார், அதிகாரிப்பட்டி சிவக்குமார், நீர்முள்ளிக்குட்டை சுப்பிரமணி, பெத்தநாயக்கன்பாளையம் பழனிவேல், வாழப்பாடி கமலா உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News