உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணை பூங்காவிற்கு 8,456 சுற்றுலா பயணிகள் வருகை

Published On 2023-07-24 12:35 IST   |   Update On 2023-07-24 12:35:00 IST
  • மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
  • இந்த பூங்காவில் பொது பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5. வசூல் செய்யப்படுகிறது.

மேட்டூர்:

மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொது பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5. வசூல் செய்யப்படுகிறது.பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு தருமபுரி நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து வழக்கத்தை விட கூடுதலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News