உள்ளூர் செய்திகள்
245 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
- தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூர் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தாரமங்கலம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 17 மூட்டைகளில் இருந்த சுமார் ரூ.95 ஆயிரம் மதிப்பிலான 245 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையில் போலீசார் சோதனை செய்வதை அறிந்து அதன் உரிமையாளர்களான சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (37), லிங்கராஜ் (39) ஆகியோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.