உள்ளூர் செய்திகள்

சத்தியமூர்த்தி பவன் மோதல் சம்பவத்தில் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மீது வீண் பழி சுமத்துகிறார்கள்- அம்பை முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் அறிக்கை

Published On 2022-11-18 09:24 GMT   |   Update On 2022-11-18 09:24 GMT
  • நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • தொண்டர்களை தாக்கிய கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

நெல்லை:

அம்பை வட்டார முன்னாள் காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தன் பதவி போய்விடும் என்று பதறி தொண்டர்களை அடித்தது வீடியோக்கள் மூலம் ஆதாரத்துடன் தெரிகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மாவட்ட தலைவர் அனைவரையும் கூட்டம் போட்டு தன்னை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து இதற்கு யார் மீதாவது பழி போட வேண்டும் என்று கருதி ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மீது பழி சுமத்தி உள்ளார்.

நடந்த உண்மைகளை சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப் பெரு ந்தகை எம்.எல்.ஏ. தெளிவாக பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு வட்டாரத் தலைவர்களும் தங்களை தாக்கியது கே.எஸ்.அழகிரி தான் என்று ஆதாரத்துடன் கூறி உள்ளார்கள். எந்தெந்த தொகுதியில் பிரச்சனைகள் இருக்கிறதோ அந்த தொகுதி எம்.எல்.ஏ.விடம் கூறுவார்கள். ஆனால் ரூபி மனோகரன் 5 நாட்களாகவே நாங்குநேரி–யில் இல்லை, சென்னையில் இருந்தார்.

அம்பை வட்டாரத்தில் இருந்து நான் 50 காங்கிரஸ் தொண்டர்களை அழைத்து சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றேன். ரூபி மனோகரன் தான் காரணம் என்றால் எனது தொகுதி எம்.எல்.ஏ. அவர் இல்லை. பிறகு எப்படி அவர் காரணமாவார்.

தொண்டர்களை தாக்கிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News