உள்ளூர் செய்திகள்

சிறுபான்மையினருக்கு ரூ.57.80 லட்சம் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி மஸ்தான் வழங்கினர்

Published On 2022-09-21 22:34 IST   |   Update On 2022-09-21 22:34:00 IST
  • கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் பயனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன
  • தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர், திருப்போரூர் எம்எல்ஏக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை சார்பில் மாவட்ட கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் 614 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைசச்ர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர், ரூ.57.80 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினர்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ் குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் ராகுல் நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News