உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் - கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-07-06 10:38 GMT   |   Update On 2022-07-06 10:38 GMT
  • பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
  • அரசு, பொதுத்துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா நோய்த் தொற்றுபரவலை தடுக்கும் விதமாக, அனை வரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அரசு விதிகளின்படி ரூ. 500 அபராதம் வசூலிக்கப்படும்.

அரசு, பொதுத் துறை, தனியாா் அலுவலகங்களில் பணிபுரியும் பணியா ளா்கள் முகக்கவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள் முகக்கவம் அணிந்து வருவதை பள்ளி, கல்லூரி நிா்வாகம் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

பஸ்கள், அனைத்து விதமான வியாபார கடைகள், திரையரங்குகள், பொது நிகழ்வுகள், திருமண மண்டபங்களில் நிகழும் திருமணம், காது குத்துதல், இதர நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வழிபாட்டு தலங்களுக்கு வரும் பக்தர்கள் முகக்க வசம் அணிந்து வருவதை கோவில் நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு ள்ளது.

Tags:    

Similar News