உள்ளூர் செய்திகள்

கோபிசெட்டிப்பாளையத்தில் பரபரப்பு -வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளை

Published On 2023-04-07 20:47 IST   |   Update On 2023-04-07 20:47:00 IST
  • ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுதர்சன், புது வீடு வாங்க ரூ.2.80 கோடி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.
  • இந்நிலையில், வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு :

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.2.80 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவர் சுதர்சன். இவர் புதிய வீடு வாங்குவதற்காக ரூ.2.80 கோடி பணத்தை வீட்டில் வைத்திருந்தார்.

இந்நிலையில், வீட்டின் கதவை உடைத்து 2.80 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் திருடிச்சென்றனர். பணம் கொள்ளை போனது குறித்து கோபிசெட்டிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News