தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலை - உலகளாவிய திறன் மையத்தின் தலைநகர் 'தமிழ்நாடு' - மு.க.ஸ்டாலின்
- சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் சென்ற சேர வேண்டும் என திட்டங்களை வகுத்தவர் கலைஞர்.
- தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச்செல்லும் தொலைநோக்கு பார்வை கொண்டவர் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
* தமிழகத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி பயணத்தில் இது முக்கியமான தருணம்.
* தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது.
* தமிழ்நாட்டின் தொழில்நுட்ப பயணத்திற்கு இன்று நடைபெறும் தகவல் தொழில்நுட்ப மாநாடு சிறப்பு சேர்க்கும்.
* திராவிட மாடல் ஆட்சிக்குப்பின்னர் தான் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப மாநாடுகள் நடத்தப்படுகிறது.
* சாதாரண மக்களுக்கும் தொழில்நுட்பம் சென்ற சேர வேண்டும் என திட்டங்களை வகுத்தவர் கலைஞர்.
* உலகளாவிய திறன் மையத்தின் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது.
* நவீனத்தை நோக்கிய பாய்ச்சலுடன் தமிழக அரசு தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறது.
* தொழில்நுட்பத்தை சமூக முன்னேற்றத்திற்கான கருவியாக பார்க்க வேண்டும்.
* 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடப்பதாக மத்திய அரசின் புள்ளி விபரம் கூறுகிறது.
* திராவிட மாடல் ஆட்சி என்றால் என்னவென்று மத்திய அரசு கேட்கும் கேள்விக்கு அவர்கள் வெளியிடும் வளர்ச்சி தரவுகளே பதில்.
இவ்வாறு அவர் கூறினார்.