உள்ளூர் செய்திகள்

அனுவாவி சுப்பிரமணியர் சுவாமி கோவிலுக்கு செல்ல ரோப்கார் வசதி

Published On 2023-08-09 14:48 IST   |   Update On 2023-08-09 14:48:00 IST
  • கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் அடிவாரத்தில் 500 படிகள் ஏறி தான் கோவிலுக்கு செல்ல முடியும்.
  • வனத்துறை அனுமதி கிடைத்ததும் பணிகளை தொடங்க திட்டம்

கோவை,

கோவை மாவட்டத்தில் மலை மீது உள்ள முருகன் கோவில்களில் ஒன்று அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில் ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விழா, தைப்பூச விழா ஆகியவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த கோவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது உள்ளது. கோவிலுக்கு செல்ல வேண்டுமானால் அடிவாரத்தில் 500 படிகள் ஏறி தான் கோவிலுக்கு செல்ல முடியும்.

500 படிகள் ஏறி செல்ல வேண்டி இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே பழனி தண்டாயுதபாணி கோவிலில் இருப்பது போல் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் ரோப்கார் வசதி ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று அனுவாவி கோவிலில் ரோப்கார் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து முதலில் அந்த மலையில் ரோப்கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. அரசு சார்ந்த நிறுவனமான இட்காட் நிறுவன என்ஜினீயர்கள் குழுவினர் கோவிலுக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர்கள் ஆய்வ றிக்கை சமர்ப்பித்தனர். அதில் அனுவாவி கோவிலில் ரோப்கார் வசதி ஏற்படுத்த சாத்தியக்கூறுகள் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

இதனால் பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறை யினரின் ஒப்புதல் பெற விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில் வனத்துறை யினரின் அனுமதியும் கிடைத்து விடும் என கூறப்படுகிறது. அதன்பிறகு ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் முறைப்படி தொடங்க உள்ளது. 

Tags:    

Similar News