உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் பரபரப்பு: போலீஸ் ஏட்டுவை தாக்கிய 4 வாலிபர்கள்

Published On 2022-12-04 13:14 IST   |   Update On 2022-12-04 13:17:00 IST
  • விருத்தாசலம் போலீஸ் ஏட்டு செல்வராஜ் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றார்.
  • 2 வாலிபர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர்.

கடலூர்:

விருத்தாச்சலம் பஸ் நிலையம் அருகே ஜங்ஷன் ரோட்டில் நேற்று இரவு 4 வாலிபர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக விருத்தாசலம் போலீஸ் ஏட்டு செல்வராஜ் பணி முடிந்து தனது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு பொது மக்களுக்கு இடையூறாக நின்று பேசிக் கொண்டிருந்த 4 வாலிபர்களிடம் சென்று விசாரணை செய்தார். ஆத்திரமடைந்த அந்த வாலிபர்கள் போலீஸ் ஏட்டு என்று கூட பாராமல் செல்வராஜை சரமாரியாக தாக்கினார்.

இதில் காயமடைந்த செல்வராஜ் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்தி ற்கு விரைந்து சென்று போலீஸ் ஏட்டுவை தாக்கிய 4 வாலிபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்க ளில் 2 வா லிபர்களை போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்து கைது செய்த னர். விசாரணை செய்ததில் தர்மபுரியைச் சேர்ந்த அன்பு (வயது 22) மணி (20) என்பது தெரியவந்தது. மேலும் தப்பியோட 2 வாலிபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

Tags:    

Similar News