உள்ளூர் செய்திகள்

கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பில் வேகத்தடை அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.


செங்கோட்டை பகுதியில் அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-12-22 06:28 GMT   |   Update On 2022-12-22 06:28 GMT
  • செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
  • இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டையில் இருந்து சுரண்டை செல்லும் நெடுஞ்சாலை மிகவும் பிரதான சாலையாகும். இச்சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

இந்த சாலையின் செங்கோட்டை நுழைவு பகுதி அருகில் அபாயகரமான வளைவு பகுதிகள், கணக்கபிள்ளைவலசை நான்கு முக்கு சந்திப்பு, சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, இலத்தூர் சந்திப்பு சாலை, ஈனாவிலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வாகன விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தது.


இதனால் பிரதான சாலையில் பெரும் அளவில் விபத்துகள் தடுக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் இலத்தூர் உள்ளிட்ட பிரதான சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் அமைத்து சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்லவலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News