உள்ளூர் செய்திகள்

யானை தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு நிவாரண உதவி

Published On 2023-08-31 14:40 IST   |   Update On 2023-08-31 14:40:00 IST
  • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா்
  • வனத்துறை அதிகாரிகள் ரூ.4.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கினர்

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, தேவா்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பக்கொல்லி கிராமத்தைச் சோ்ந்த குட்டன் என்பவா், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தாா்.

அவரது குடும்பத்துக்கு வனத்துறை சாா்பில் ஏற்கெனவே ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்படது. தற்போது மீதமுள்ள ரூ.4.50 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலை தரப்பட்டு உள்ளது.

இதனை வனத்துறை அதிகாரிகள் யானை தாக்கி பலியான குட்டன் குடும்பத்தினரிடம் வழங்கினா். அப்போது பேரூராட்சித் தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு, வனச் சரக அலுவலா் ராதாகிருஷ்ணன், வனவா் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News