கருமத்தம்பட்டி அருகே விஜய் பாடல் போட மறுப்பு-பூசாரி மீது தாக்குதல்
- பூசாரியை தாக்கியதாக சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- தலைமறைவாக உள்ள சத்தியசீலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள பதுவம்பள்ளி இந்திரா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(40). ஆட்டோ டிரைவர். இவர் அந்த பகுதியில் உள்ள கருப்பராயன் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.
சம்பவத்தன்று கோவிலில் திருவிழா நடந்தது. அப்போது ஒலிபெருக்கியில் சாமி பாடல் படித்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த 3 பேர் சாமிநாதனிடம் விஜய் பாடல் போடகோரி தகராறு செய்தனர். இதனால் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 3 பேரும் பூசாரியை தாக்கி விட்டு அங்கிருந்து சென்றனர்.
இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பூசாரியை தாக்கிய மோப்பிரிபாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமார்(22) என்பவரை கைது செய்தனர். மேலும் அவருடன் வந்த 17 வயது சிறுவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சத்தியசீலன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.