உள்ளூர் செய்திகள்
- 313 மனுக்கள் பெறப்பட்டது
- ரூ. 1.4 கோடி மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த மருதாலம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.
மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்சவேணிபெரியசாமி, தாசில்தார் ஆனந்தன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் செல்வி வரவேற்றார்.
இந்த முகாமில் மொத்தம் 313 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 293 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ. 1 கோடியே 4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன.