உள்ளூர் செய்திகள்
லாலாபேட்டையில் பொதுமக்கள் சாலை மறியல்
- எல்லையை மறு வரையறை செய்ய வலியுறுத்தல்
- 40 பேர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
ராணிப்பேட்டை:
லாலாபேட்டை அருகே உள்ள காஞ்சனகிரி மலையில் கிராம எல்லையை மறு வரையறை செய்யக்கோரி நேற்று லாலாபேட்டை சாவடி அருகே பொன்னை மெயின் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலை வர் கோகுலன், கோடீஸ்வரன், ஜெயசீலன் மோகன், தேவேந் திரன், சுப்பிரமணி, எல்.வி.மணி உள்ளிட்ட பலர் மீது கிராம நிர்வாக அலுவலர் கல்யாண குமார் கொடுத்த புகாரின் மீது சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.