கலவை, கூடலூரில் நாளை கருணாநிதி நூற்றாண்டு விழா மருத்துவ முகாம்
- பொதுமக்கள் பயன்பெறலாம்
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களிலும் 24-ந்தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை. சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி,பெண்களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக மேற்க்கொள்ளப்படுகிறது.
மேலும் பொது மருத்துவம். பொது அறுவை சிகிச்சை. மகளிர் மருத்துவம், கண், காது மூக்கு, தொண்டை, பல் மருத்துவம்,எலும்பியல் மற்றும் மனநல மருத்துவம்,காசநோய் பரிசோதனை மற்றும் தொழுநோய் உள்பட அனைத்திற்கும் சிறப்பு மருத்துவர்களால் பன்னோக்கு மருத்துவ சிகிச்சையும், இதனுடன் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாளு கலெக்டர் வளர்மதி கேட்டு கொண்டுள்ளார்.