உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்த காட்சி.

ராணிப்பேட்டையில் வாழை மரத்திற்கு ஊசி

Published On 2023-01-09 15:05 IST   |   Update On 2023-01-09 15:05:00 IST
  • வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளுவது குறித்து விளக்கம்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த கட்டளை ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர்.

மேலும் வாழை மரத்திற்கு ஏற்படும் நோய் மற்றும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எப்படி கையாள வேண்டும் என ஆதிபராசக்தி கல்லூரி மாணவிகள் தர்ஷினி, டில்லி வந்தனா, திவ்யபாரதி, திவ்யஸ்ரீ, ஹரிணி, செ.ஹரிணி.

அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு வாழை மரத்துக்கு ஊசி செலுத்தி நோய் தாக்கத்திலிருந்து எப்படி காப்பாற்ற வேண்டுமென செய்முறை விளக்கம் அளித்தனர்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் முருகேசன் முனுசாமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News