உள்ளூர் செய்திகள்
பழுது பார்த்த போது தீ பிடித்து எரிந்த பைக்கை படத்தில் காணலாம்.
- பழுது பார்த்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த பத்மாபுரம் பகுதியில் பைக் ேஷாரும் உள்ளது. அந்த ேஷாருமில் ஒரு பைக் பழுது ஏற்பட்டதை சரி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தீபற்றி எரிந்து முழுவதுமாக சேதமடைந்து. தகவலறிந்த சோளிங்கர் தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் தலைமையில் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் 1 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.