டிட்வா புயலால் இதுவரை 3 பேர் உயிரிழப்பு - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்
- இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
- 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* கடலூர், விழுப்புரம், சென்னையில் அதிக மழை இருக்கும் என எதிர்பார்த்தோம்.
* புயல் காரணமாக எதிர்பார்த்த அளவிற்கு மழை இதுவரை பெய்யவில்லை.
* இலங்கையில் சிக்கி தவித்து வருபவர்களை அழைத்து வருவதற்கான பணிகள் நடக்கிறது.
* இலங்கையில் சிக்கி தவிப்பவர்கள் இன்று தமிழ்நாட்டிற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது.
* தற்போது பெய்த மழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
* தூத்துக்குடி, தஞ்சையில் 2 பேர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.
* மயிலாடுதுறையில் 20 வயது இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
* தமிழகத்தில் பெய்த மழையால் 56 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
* புயலின் தாக்கம் குறித்து மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறும்.
* 38 நிவாரண மையங்களில் 2,393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.