சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தூரத்தில் டிட்வா புயல் - கனமழைக்கு வாய்ப்பு
- தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.
- கடலில் இருந்து மேலும் விலகி சென்னைக்கு 70 கி.மீ. தூரம் வரை மட்டும் டிட்வா புயல் நகரும்.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 220 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தாலும் மழை குறையும்.
மழை குறைவாக பொழிந்தாலும் காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை, காற்றுக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று மாலை தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையில் இருந்து குறைந்தபட்சம் 70-30 கி.மீ. தொலையில் மையம் கொண்டிருக்கும்.
கடலில் இருந்து மேலும் விலகி சென்னைக்கு 70 கி.மீ. தூரம் வரை மட்டும் டிட்வா புயல் நகரும். அதற்கு பிறகு டிட்வா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக வலுவிழக்கும். இன்று இரவுக்குள் டிட்வா புயல் வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.