உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழாவில் கோஷ்டி மோதல்

Published On 2023-06-26 13:20 IST   |   Update On 2023-06-26 13:33:00 IST
  • தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம்
  • வருவாய் துறையினர் சமரசம்

நெமிலி:

நெமிலி அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த 10 நாட்களாக அக்னி வசந்த விழா நடைபெற்றுவந்தது. விழா கடைசி நாளான நேற்று துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது.

முன்னதாக காலை 11 மணியளவில் கோடம்பாக்கம் வழியாக ஜலம் தண்ணீர் கொண்டு வரும் நிகழ்ச்சியின்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷ்டி மோதலில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.

பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News