உள்ளூர் செய்திகள்

அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-16 15:27 IST   |   Update On 2023-05-16 15:27:00 IST
  • புதிய வாகனங்கள் வழங்க வலியுறுத்தல்
  • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டையில் தமிழ்நாடு அரசு துறை வாகன ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மோகன மூர்த்தி,சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வழங்க வேண்டும், அனைத்து துறைகளிலும் ஓட்டுனர் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், ஓட்டுநர்களுக்கு தர ஊதிய முரண்பாட்டை கலைந்து புதிய ஊதிய திருத்தம் அமல்படுத்த வேண்டும், கல்வித் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

Similar News