உள்ளூர் செய்திகள்

பெண்கள் சாலை மறியல் செய்த காட்சி.

ஏரி கால்வாய் தூர்வாரப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2023-03-14 14:17 IST   |   Update On 2023-03-14 14:17:00 IST
  • தாசில்தார் பேச்சுவார்த்தை
  • போக்குவரத்து பாதிப்பு

ஆற்காடு:

ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் கிராமத்தில் ஏரி கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் தூர்வாரி பல ஆண்டுகள் ஆவதால் தற்போது தூர்வார வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இது நாள் வரை ஏரி கால்வாய் தூர்வாரப்படவில்லை என தெரிகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் நேற்று சர்வந்தாங்கல் பஸ் நிறுத்தத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த ராணிப் பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், ஆற்காடு தாசில்தார் வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்படவே மறியலை கைவிட்டு அனைவ ரும் கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News