உள்ளூர் செய்திகள்

ராணிப்பேட்டை முத்துகடையில் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2023-02-24 16:13 IST   |   Update On 2023-02-24 16:13:00 IST
  • மாத கட்டணம் சுமார் ரூ.300-லிருந்து 500 ரூபாய் வரை உயர உள்ளதாக குற்றச்சாட்டு
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை முத்துக்கடையில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கேபிள் டிவி கட்டணம் சேனல்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தனவேல் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் வரவேற்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முழுவதும் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் செயல்பட்டு வருகின்றோம்.சுமார் ஒரு கோடி கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

தற்போது அரசின் கீழ் செயல்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக்கொள்ள சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.ஏற்கனவே பல்வேறு விலை உயர்வின் காரணமாக மக்கள் துயரத்தில் இருக்கும் பொழுது உழைக்கின்ற மக்கள் பொழுது போக்கு சாதனமாக பயன்படுத்துகின்ற கேபிள் டிவி கட்டணத்தை உயர்த்துவது என்பது நியாயமற்ற செயலாகும். வருகின்ற மார்ச் 1 முதல் கேபிள் டிவி மாத கட்டணம் சுமார் 300 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரையும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது.எனவே விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த கோரி தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் பதாகைகள் ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.இந்த ஆர்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுக்காவிலுள்ள கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News