உள்ளூர் செய்திகள்
பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
- கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஈச்சம் தாங்கள் கிராமத்தில் தனியார் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறி (மஞ்சள் நிற ஒட்டும் பொறி, நீல நிற ஒட்டும் பொறி, இன கவர்ச்சி பொறி) வைப்பது குறித்து அப்பகுதியில் உள்ள தோட்ட பயிர்களை பயிடும் விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் செய்து விளக்கினர்.
பின்னர் தோட்டக்கலை விவசாயிகள் வெள்ளரி இன காய்கறிகளில் வரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாட்டான்மை தாரர்கள் விவசாயிகள் கலந்து கொண்டனர் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் கனிமொழி மு. கார்த்திகா, மு.கீர்த்தனா, சு.கௌசிகா, பெ.ந.லோகேஸ்வரி, பொ.லோகேஸ்வரி ஆகியோர் இருந்தனர்.