உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை கலெக்டர் வழங்கிய காட்சி.

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள்

Published On 2023-07-04 14:41 IST   |   Update On 2023-07-04 14:41:00 IST
  • கலெக்டர் வளர்மதி வழங்கினார்
  • ரூ.90ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். பொதுமக்கள் மற்றும் மாற்றுத்தி றனாளிகளிடமிருந்து மொத்தம் 243 கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கினார். பின்னர் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரருக்கு தெரிவிக்கவும் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.98 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான செயற்கை கால்கள் வழங்கப்பட்டன. தாட்கோ மற்றும் தமிழ்நாடு சிமென்ட் கழகத்துடன் இணைந்து சிமெண்ட் விற்பனை முகவராகும் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ரூ.90ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர்

ஸ்ரீ வள்ளி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பூங்கொடி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார், தாட்கோ உதவி மேலாளர் அமுதா ராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News