உள்ளூர் செய்திகள்
சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு
- பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
- சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவில் உள்ளது.
இங்கு நேற்று ஆனி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையொட்டி நந்தி பகவானுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் பழங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகளும், மகா தீபாராதனை யும் நடைபெற்றது.
பின்னர் சாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.