உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் கிசான் ஊக்கத்தொகை பெற ஆதார் அவசியம்

Published On 2023-06-24 13:25 IST   |   Update On 2023-06-24 13:25:00 IST
  • அரக்கோணம் வட்டார வேளாண்மை மையம் அறிவிப்பு
  • வருகிற 27-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்

அரக்கோணம்:

பிரதம மந்திரியின் கிசான் ஊக்கத்தொகை 4 மாதத்திற்கு ரூ 2000 வீதம் வருடத்திற்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

14-வது தவணை தொகையை பெற வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை வரும் 27-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நிதி வரவு நிறுத்தப்படும்.

எனவே விவசாயிகள் அருகில் உள்ள வங்கி, இ சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஆதார் எண்ணை இணைத்தும் e KYC செய்தும் பயனடையுமாறு அரக்கோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News