உள்ளூர் செய்திகள்

பரமக்குடி அருகே உள்ள கலையூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

பரமக்குடி பகுதியில் கிராம சபை கூட்டம்

Published On 2022-11-04 13:20 IST   |   Update On 2022-11-04 13:20:00 IST
  • பரமக்குடி பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முருகேசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
  • செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார்

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி,போகலூர், நயினார் கோவில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது. பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.

பொது மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அரசின் மூலம் நலத்திட்ட பணிகள் குறித்த கணக்கு வழக்குகள் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டது.இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பெத்துக்காளை நன்றி கூறினார்.

புட்டிதட்டி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

செவ்வூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா சின்னார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் காளீஸ்வரர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் முருகேசன் நன்றி கூறினார்.

மஞ்சூர் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கலைச்செல்வி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் வடிவேல் நன்றி கூறினார்.

போகலூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பழனி நன்றி கூறினார்.

அரிய குடிபுத்தூர் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக் பாண்டியன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி ஒன்றியம் கலையூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுபேகா தலைமையில் நடந்த கிராமசபை கூட்டத்தில், பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

Similar News