உள்ளூர் செய்திகள்

போதைப் பொருள் தடுக்க இளம் தலைமுறையினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்

Published On 2023-08-12 12:34 IST   |   Update On 2023-08-12 12:34:00 IST
  • போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க இளம் தலைமுறையினர் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
  • புதிய பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் மாணவ-மாணவிகள் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

அதனை தொடர்ந்து போதைப் பொருள்களினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.முன்னதாக ராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை முன்னி லையில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக புதிய பஸ் நிலையம் வரை மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்ற னர்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் நாகராஜன், துணை போலீஸ் சூப்பி ரண்டு ராஜா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News