உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி

Published On 2023-11-07 07:15 GMT   |   Update On 2023-11-07 07:15 GMT
  • தொண்டியில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது.
  • அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள அமீர் சுல்தான் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6ம் ஆண்டு பள்ளி மாணாவர்களுக்கான மாவட்ட அளவிலான எம்.ஆர்.எம். அப்துர்-ரகீம் பேச்சுப்போட்டி நடந்தது. தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முகம்மது ரபீக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அல்ஹிலால் அறக்கட்டளை தலைவர் கமால்பாட்ஷா தலைமை தாங்கினார். நிர்வாக அலுவலர் அப்துல் ரவூப் நிஸ்தார் வரவேற்று பேசினார். தொண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் சமகால இந்தியா சமத்துவத்தின் சோலையா? சீரழிவின் பாலையா? என்ற தலைப்பில் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டனர்.

முதல் பரிசு கீழக்கரை பியர்ல் மெட்ரிக் பள்ளி மாணவி கிருஷ் ரோஷிணி, 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி அல்ஹா, 3-ம் பரிசு ராமநாதபுரம் செய்யது அம்மமாள் ஆண்கள் மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வக்குமார், தமிழ் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு ஆர்.எஸ்.மங்களம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகம்மது அஸ் பாக், 2-ம் பரிசு தொண்டி அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி மாணவி ஹசன் பியாஷா, 3-ம் பரிசு ஆர்.எஸ்.மங்களம் ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் பள்ளி மாணவி கமர் மெர்ஸிஹா ஆகியோர் பெற்றனர். அல்ஹிலால் மெட்ரிக் பள்ளி தாளாளர் அஹமது இப்ராகிம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News