உள்ளூர் செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார். அருகில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. உள்ளனர்.

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்

Published On 2022-09-18 08:00 GMT   |   Update On 2022-09-18 08:00 GMT
  • 1842 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலெக்டர் வழங்கினார்.
  • படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி, எம்.எல்.ஏ. காதர் பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்டு ஏராளமான மாணவ-மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். அதே போல் நீங்கள் கல்லூரி படிப்பை தொடர்ந்து அரசு வழங்கும் மாதம் ரூ.1000 திட்டத்தைப் பெற்று பயன்பெற வேண்டும் என்றார்.

இதில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 1,842 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேஷ் பாண்டியன், பள்ளிக்கல்வித்துறை ஆய்வாளர்கள் செல்வராஜ், தட்சிணாமூர்த்தி, ராமமூர்த்தி, தலைமை ஆசிரியர் காஜாமுகைதீன், உதவி தலைமை ஆசிரியர் ஜாகிர்உசேன், அரசு பள்ளி உடற்கல்வி இயக்குநர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News