உள்ளூர் செய்திகள்

நண்டு விலை குறைந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி

Published On 2022-06-20 08:12 GMT   |   Update On 2022-06-20 08:12 GMT
  • நண்டு விலை குறைந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
  • மீன் விலை குறைந்த நிலையிலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்போது விலை அதிகரித்துள்ளது.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள களிமண்குண்டு, பெரியபட்டினம், சேதுக்கரை, வேலாயுதபுரம், மாயாகுளம், கீழக்கரை உள்ளிட்ட வட்டாரப் பகுதிகளில்ஏராளமான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

சில தினங்களாக மீன்பாடு இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது அதிக அளவு மீன் வரத்து உள்ளது. வாடைக் காற்று வீசியதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், சமீபத்தில் பெய்த மழை யாலும் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்கள் கிடைத்து வருகிறது.

இதனால் மொத்த வியா பாரிகள் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர். மீன் விலை குறைந்த நிலையிலும் மார்க்கெட்டுக்கு கொண்டு வரும்போது விலை அதிகரித்துள்ளது.

குறிப்பாக நண்டு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.300 வரை விற்கப்படுவதால் நண்டு பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், 5 மாதங்கள் நண்டுக்கு அதிகமான கிராக்கி இருந்தது. இத னால் கிலோ ரூ.800 வரை மொத்த விற்பனையாளர்கள் வாங்கி சென்றனர். தற்போது பல்வேறு பகுதிகளிலும் நண்டு பாடு அதிகம் இருப்ப தால் மொத்த வியாபாரிகள் ரூ.250 முதல் 300 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சில மீனவர்கள் மொத்த வியாபாரிகள் எடுக்கும் விலையை விட அதிகமான விலைக்கு விற்பனை செய்யலாம் என்ற நோக்கத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மார்க்கெட்டிற்கு தற்போது நண்டு வரத்து அதிகரித்துள்ளது. கிலோ ரூ.300 முதல் 400 வரை விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

Tags:    

Similar News