உள்ளூர் செய்திகள்

கீழக்கரை அருகே உள்ள குலபதம் கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி

Published On 2022-08-17 13:56 IST   |   Update On 2022-08-17 13:56:00 IST
  • ராமநாதபுரம் அருகே தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடந்தது.
  • இந்த பயிற்சியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், சாத்தக்கோன் வலசை கிராமத்தில் உள்ள அரியமான் ஒருங்கிணைந்த பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலம் ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெறுகிறது.

இதை மாவட்ட கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார். ஆப்தா மித்ரா திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் கட்டமாக 200 தன்னார்வலர்களுக்கு 12 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியானது தகுதி வாய்ந்த, பேரிடர் மேலாண்மையில் அனுபவ–மிக்க பயிற்றுநர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் அவசர சூழ்நிலைகளை கையாள்வது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின் முடிவில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், காப்பீடு, மற்றும் அவசர கால பேரிடர் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மேதலோடை கிராமத்தில் உள்ள ஊரணியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியிகளையும், வண்ணாங்குண்டு கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் இருப்பு குறித்தும், கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

கீழக்கரை வட்டம் குலபதம் கிராமத்தில் பட்டா மாறுதலுக்கான உத்தரவு ஆணையினை 22 பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், பேரிடர் மேலாண்மை பயிற்சி மைய இயக்குநர் சோனியா, ராமநாதபுரம் வருவாய் வட்டாட்சியர் முருகேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் முருகேசன், சரவணன் , திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News