உள்ளூர் செய்திகள்

வாலிபர் நீதிமன்றத்தில் சரண்

Published On 2022-10-14 11:49 IST   |   Update On 2022-10-14 11:49:00 IST
  • வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • வழிப்பறி வழக்கில் தேடப்பட்ட

புதுக்கோட்டை:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சிகரெட் கம்பெனி வாகனத்தை காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் பகுதியில் 9 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வாகனத்தின் ஓட்டுனர் மற்றும் மேற்பார்வையாளரை தாக்கி ரூ. 11 லட்சத்தை கடந்த 6-ந் தேதி கொள் ளையடித்து சென்றனர்.

தாக்குதலுக்கு உள்ளான இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காரைக்குடி டிஎஸ்பி வினோஜி உத்தரவின் பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இதில் சில பேர் கைதான நிலையில், மேலும் 6 நபர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய காளையார் கோவிலை சேர்ந்த குட்லக் கார்த்தி என்பவர் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் சரணடைந் தார். இவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதியின் உத்தரவையடுத்து அவர் புதுக்கோட்டை கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News