- வக்கீலை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
- தந்தை கொடுத்து வந்த ஜீவனாம்சத்தை தடுக்க வாதாடினார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருவாப்பூர் அம்பாள்புரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி பரமே ஸ்வரன் தனது மனைவிக்கு மாதந்தோறும் ரூ. 3000 மகன் யோகேஸ்வரனுக்கு மாதந்தோறும் ரூ. 1500 ஜீவனாம்சமாக கொடுத்து வந்தார்.
இதில் யோகேஸ்வரன் மைனராக இருந்தபோது நீதிபதி ரூ. 1500 ஜீவனா ம்சமாக கொடுக்க உத்த ரவிட்டார். இப்போது அவர் மேஜராக மாறிவிட்டதால் மகனுக்கு கொடுத்து வந்த ஜீவனாம்சத்தை நிறுத்த பரமேஸ்வரன் முய ற்சித்தார்.
வக்கீல் மீது தாக்குதல்
பின்னர் இது தொடர்பாக புதுக்கோட்டை திருக்கோகர்ணம் கோவில்பட்டி ரோடு முனி கோவில் தெருவை சேர்ந்த ராஜா(வயது 51) என்ற வக்கீலின் உதவியை பரமேஸ்வரன் நாடினார். அவரும் யோகேஸ்வரனுக்கு கொடுத்து வந்த ஜீவனாம்சத்தை நிறுத்த கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் யோகே ஸ்வரனுக்கு வக்கீலின் மீது கடும் கோபம் ஏற்பட்டது. இதை யடுத்து புதுக்கோட்டை நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் அசோசியேஷனில் இருந்த வக்கீல் ராஜாவை யோகேஸ்வரன் கையால் அடித்து உதைத்து விட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வக்கீல் ராஜா புதுக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வக்கீலை தாக்கிய யோகேஸ்வரனை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.