உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்
- உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது
- அங்கன்வாடி பணியார்கள் சார்பில் நடந்தது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி மற்றும் திருவரங்குளம் வட்டார சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பேரூராட்சி தலைவர் ராசி முகருகானந்தம் தலைமையில், துணைத்தலைவர் ராஜேஸ்வரி பழனிகுமார், ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை, பேரூராட்சி செயலாளர் பூவேந்திரன், ஆலங்குடி அரசு மருத்துவமனையின் சுகாதார மேற்பார்வையாளர் ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலையில் திருவரங்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலு வலர் பானுப்பிரியா, குத்துவிளக்கு ஏற்றி கொடி தொடங்கி வைத்தார்.
வடகாடு முக்கம், அரசமரம் பஸ் பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு தாய்ப்பால் கொடுப்பது அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் நித்தியா, வட்டார திட்ட உதவியாளர் ஆனந்தி, ராகவி, மேற்பார்வையாளர் மணிமேகலை, கலையரசி, சத்தியவாணி, முத்தழம்மாள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.