உள்ளூர் செய்திகள்
கோவிலில் நிறுத்திய இருசக்கர வாகனம் திருட்டு
- கோவிலில் நிறுத்திய இருசக்கர வாகனம் திருட்டு போனது
- மர்ம நபரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா வேலூர் கிராமத்தை சேர்ந்தவர் மருதை மகன் நாகராஜ் (வயது 49). கூலித் தொழிலாளியான இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார்.
பின்னர் அவர் தனது மோட்டார் சைக்கிளை முருகன் கோவில் அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து அவர் விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.