உள்ளூர் செய்திகள்

பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வாலிபர் கைது

Published On 2022-10-03 13:33 IST   |   Update On 2022-10-03 13:33:00 IST
  • பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வாலிபரை கைது செய்தனர்.
  • அதிகாலை வேளையில் வீடு புகுந்து

புதுக்கோட்டை

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிகாலையில் மர்ம ஆசாமி புகுந்தான். இதனை பார்த்த வீட்டில் இருந்த பெண் சத்தம் போட்டார். உடனே அந்த மர்ம ஆசாமி வாயில் துணையை வைத்து அடைத்து கட்டி போட்டார். பின்னர் அங்கு தனி அறையில் இருந்த 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்து விட்டு, தாயின் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினான். இேத போல் மற்றொரு தெருவில் தனியாக தூங்கிய பெண்ணிடம் ஒரு பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினான்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கே.கே.நகர் போலீசில் புகார் கொடுத்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நேரடி கட்டுப்பாட்டில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் திருட்டு ஆசாமி திருச்சியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தது தெரியவந்தது. நேற்று அங்கு சென்ற போலீசார் அவனை பிடித்து விசாரித்தனர். அவன், புதுக்கோட்டை மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் (வயது 28) என்பதும், அதிகாலை வேளையில் வீடு புகுந்து பெண்களிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபடுவதோடு, அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்து செல்வதையும் வழக்கமாக செய்து வந்துள்ளான். இவன் மீது மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது உசேனை போலீசார் கைது செய்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News